• 9840434462
  • [email protected]
Live Darshan
  • ONLINE DONATION
  • Home
    • Calendar 2024
  • About Temple
    • Kazhiyur Village and the Temple
    • Temple Management
    • Temple Activities
    • Useful External Links
    • Srirangam Lord Ranganathar's visit to Kazhiyur
    • Age of Kazhiyur Temple
    • Calendar 2024
  • Renovation Activities
    • Renovation Activities
    • Donor List
    • Renovation Activities 2
  • Video Gallery
  • Image Gallery
    • Temple Photos
    • Elders of Kazhiyur
    • Photos of Important Events
    • Sabha Activities
    • Thirupavai Drawings by the children of Kazhiyur
    • Sabha Donation to Kazhiyur Village
    • Dhanurmasam 2023-2024 Photo Album
    • Dhanurmasam 2023-24 Videos
  • Family Tree
  • Events
    • Dhanurmasam 2023-24
  • Other Information
    • Prominent Personalities Of Kazhiyur
    • Interesting Episodes
    • Important links
    • Graceful Mother, Article by Shri B V Sudhakar
    • Kazhiyur: The Vaishnava Village by M S Ramesh
    • Amudha Surabhy July 2025
  • Contact Us
  • Home
    • Calendar 2024
  • About Temple
    • Kazhiyur Village and the Temple
    • Temple Management
    • Temple Activities
    • Useful External Links
    • Srirangam Lord Ranganathar's visit to Kazhiyur
    • Age of Kazhiyur Temple
    • Calendar 2024
  • Renovation Activities
    • Renovation Activities
    • Donor List
    • Renovation Activities 2
  • Video Gallery
  • Image Gallery
    • Temple Photos
    • Elders of Kazhiyur
    • Photos of Important Events
    • Sabha Activities
    • Thirupavai Drawings by the children of Kazhiyur
    • Sabha Donation to Kazhiyur Village
    • Dhanurmasam 2023-2024 Photo Album
    • Dhanurmasam 2023-24 Videos
  • Family Tree
  • Events
    • Dhanurmasam 2023-24
  • Other Information
    • Prominent Personalities Of Kazhiyur
    • Interesting Episodes
    • Important links
    • Graceful Mother, Article by Shri B V Sudhakar
    • Kazhiyur: The Vaishnava Village by M S Ramesh
    • Amudha Surabhy July 2025
  • Contact Us
  • Home
    • Calendar 2024
  • About Temple
    • Kazhiyur Village and the Temple
    • Temple Management
    • Temple Activities
    • Useful External Links
    • Srirangam Lord Ranganathar's visit to Kazhiyur
    • Age of Kazhiyur Temple
    • Calendar 2024
  • Renovation Activities
    • Renovation Activities
    • Donor List
    • Renovation Activities 2
  • Video Gallery
  • Image Gallery
    • Temple Photos
    • Elders of Kazhiyur
    • Photos of Important Events
    • Sabha Activities
    • Thirupavai Drawings by the children of Kazhiyur
    • Sabha Donation to Kazhiyur Village
    • Dhanurmasam 2023-2024 Photo Album
    • Dhanurmasam 2023-24 Videos
  • Family Tree
  • Events
    • Dhanurmasam 2023-24
  • Other Information
    • Prominent Personalities Of Kazhiyur
    • Interesting Episodes
    • Important links
    • Graceful Mother, Article by Shri B V Sudhakar
    • Kazhiyur: The Vaishnava Village by M S Ramesh
    • Amudha Surabhy July 2025
  • Contact Us

Netra

Lord Ranganathar’s visit to Kazhiyur Temple



ஶ்ரீமதே ராமாநூஜாய நம:


கேசவன்தமர்களே,

ஆங்கிலத்தில் “Please introduce yourself” என்பார்கள். அது தான் நம் சம்பிராயத்தில் அபிவாதனம் சொல்லுதல் இன்ன கோத்திரம் ,இன்ன ஸூத்தரம் etc etc அதற்கு முன்பாக.

முதன் முதலில் நம் திருக்கோவில் தலப்புராணத்தில் ஶ்ரீரங்கம் ஶ்ரீஅழகியமணவாளன் தற்பொழுது நம்பெருமாள் என அழைக்கப்படும் உத்ஸவமூர்த்திக்கும் உள்ள மிக நெருங்கிய தொடர்பைப் பற்றிய வரலாற்று உண்மை சம்பவத்தைப் பற்றி முதலில் சொல்லவேண்டும்.

பெருமாளைப் பற்றிச் சொல்லும் முன் குருவைப்பற்றிச் சொல்லவேண்டும் என்பது நியதி. ஸ்ரீ ராமானுஜர் முற்றும் துறந்தாலும் முதலியாண்டானை விடேன் என்றார். அம்முதலியாண்டான் திருவம்சத்திற்கும் நம் திருக்கோவிலுக்கும் உள்ள சம்மந்தம் ஏற்ப்பட்ட விபரம் நம்பெருமாள் உறவைக்காட்டிலும் மேன்மையானது என்றால் அதுமிகையாகாது. முதலியாண்டான் திருவம்சத்தாரிடம் ஶ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் இருந்துவந்தது என்பது நாம் அறிந்த விஷயம் தான். அம்முதலியாண்டான் திருவம்சத்தில் 8th Genration Aachariyan thirunamam Thirugopurathu Nayanar period approx (1260to1350AD).ஸ்வாமிக்கு மூன்று குமாரர்கள். 1)பெரியண்ணன் 2) சிற்றண்ணர் 3) தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் ஆவார்கள். அந்நியர்கள் படையெடுப்பால் ஒரு களேபரத்தில் ஶ்ரீரங்கத்தை விட்டு நம்பெருமாள் அகன்ற வருடம் 1323AD .அச் சமயத்தில் வயதில் இளையவரான தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் வயது சுமார் 20 என்று வைத்து கொள்ளுவோம். வயதில் சிறியவரிடம் காண்பித்தால் பெரியவர்கள் திருநாட்டுக்கு ஏளினாலும் பெருமாள் திரும்பிவர பல வருடங்கள் ஆனாலும் இவர்கள் விபரங்களை சொல்லுவார்கள் என்ற அப்பிராயத்தில் இப்படி செய்தனர். அவரிடம் பெரியபிராட்டி உத்ஸவ விக்ரஹம் மற்றும் திருவாபரணங்கள் மறைத்து வைத்த இடங்களை காட்டிவிட்டு தாமும் பெரியண்ணர் சிற்றண்ணனுடன் நம்பெருமாளுடன் ஶ்ரீரங்கத்தை விட்டு புறப்பட்டனர்.முதலில் மதுரையை அடுத்த ஜோதிஷ்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கிருந்து திருமாலிருஞ்சோலையை அடைந்தனர். உடல்நலகுறைவு ஏற்பட்டு திருக்கோபுரத்து நாயனார். ஶ்ரீரங்கம் திரும்பிவிட்டார். பெரியண்ணன் சிற்றண்ணன் பெருமாளுடன் சென்றனர்.நம்பெருமாள் 1334-1370AD வரை 26 ஆண்டுகள் திருமலை வாசம் செய்தார்.

திருமலையில் திருவேங்கடமுடையானுக்கு தட்டையார்கள் திருவம்சத்தினர் தோமாலா கைங்கர்யம் செய்து வந்தனர். அவர்கள் நம்பெருமாளுக்கும் கைங்கர்யம் செய்து வந்தனர். நம்பெருமாள் திருப்பதியிலிருந்து ஶ்ரீரங்கத்துக்கு 1371AD தமிழ்க்கு பரீதாபி வருஷம் புறப்பட்டார். நம்பெருமாளுக்கு 25 ஆண்டுகளாக கைங்கர்யம் செய்து வந்த தட்டையர்கள் நம்பெருமாளை பிரிய மனமில்லாமல் சிலர் குடும்பத்துடன் அவருடன் புறப்பட்டனர். நம்பெருமாள் திருமலையிலிருந்து புறப்பட்டு வருவதை கேள்விபட்டு முதலியாண்டான் தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் ஶ்ரீரங்கத்திலிருந்து தம் சிஷ்யர்கள் சூழ புறப்பட்டு வர காழியூர் நம் கேசவன் திருக்கோவிலை நெருங்க இரு கோஷ்டிகளும் திருக்கோவில் வாசலில் சந்திதனர். அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது நம்பெருமாள் நம் கேசவன் சந்நிதியில் விடாயத்து கண்டருளினார். அன்று பரீதாபி வருஷம் சித்திரை மாசம் உத்திரட்டாதி நட்க்ஷத்திரம் நம்பெருமாளை சேவிக்க நம் திருக்கோவிலில் ஶ்ரீவைஷணவ ஜன சமுத்திரம். முதலியாண்டான் தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் ஶ்ரீரங்கத்திலிருந்து தம் சிஷ்யர்கள் திருமலையிலிருந்து வந்திருந்த தட்டையரகள் நமபெருமாள் ஶ்ரீயதிராஜவல்லி கேசவனிடம் தம்மனங்களை பறிக்கொடுத்தனர்.அன்றிரவு மன்னார் கிரங்களில் தங்கினர்.ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம், உபயகுசலம் .வேறு என்ன கேசவனிடம் மயங்கிய தட்டையர்கள் காழியூர் நிரந்தரவாஸிகளாகி விட்டார்கள். விடிந்ததும் சித்திரை ரேவதி நம்கேசவனும் நம்பெருமாளின் மாச திருநட்க்ஷத்திரத்தில் ஏக ஸ்தானத்தில் இன்று ரங்கநாதர் நம் திருக்கோவிலில் ஏளியிருக்கும் இடத்தில் திருமஞ்சனம் கண்டருளினர். எங்கும் வேதமுழக்க சப்தம். மறுபுறம் முதலியாண்டானிடம் மன்னார் ஸக குடும்பத்துடன் ஸமாஷ்சரண வைபவம். அன்றிலிருந்து 645 வருஷங்களாக சித்திரை ரேவதியை கொண்டாடி வருகிறோம். நேற்றுவரை காஞ்சிபுரம் அருகிலிருப்பதால் முதலியாண்டான் ஸ்வாமிகள் ஏளுகின்றனர் என்று எண்ணியிருந்த நமக்கு காஞ்சிபுரத்திலிருந்து காழியூர் வரும் வழியில் எவ்வளவு திருக்கோயில்கள் இருந்தும் நம் திருக்கோவிலுக்கு ஏளுவதன் காரணமும், மன்னார்கள் முதலியாண்டான் திருவடி சம்பந்தமும், தட்டையர்கள் காழியூருக்கு எப்பொழுது எப்படி வந்தனர் என்றும் நாம் சித்திரை ரேவதியின் கொண்டாடும் காரணமும் அனைத்து கேள்விக்கும் ஒரு சரியான விடை கிடைத்தாகிவிட்டது.வேறும் கற்பனை என்று விட்டுவிடவேண்டாம். சுமார் 150 வருடங்களாக எங்கள் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள அடியேனுக்கு ஆணையிட்ட ஶ்ரீஎதிராஜவல்லி ஆதிகேசவன் திவ்ய தம்பதிகளின் திருவடிகளில் சிரம்பதித்து அமைகிறேன்.

மதுரை வாழும் ஶ்ரீ. உ. வே. ரங்கநாதன்  

  • Share:
  • Share:

Follow Us

Upcoming Events

Subscribe

Map

Address

KAZHIYUR ADHIKESAVA PERUMAL, Kaliyur Village and Post,Cheyyar Taluk.Thiruvannamalai. District. 604407, Tamil Nadu 604407
9840434462
[email protected]

Contact Form

2021 © 3ioNetra Temple Management Platform, All Rights Reserved.

Privacy Policy     Terms & Conditions